ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளார். இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பாக தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது ஸ்ரேயாஸ் விலகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. இதில் இந்திய அணி 2 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றது. கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-1என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர், நாளை மறுதினம் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப் கூறியதாவது- விளையாட்டின் போது காயங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது ஆகும். நம்மிடம் மிகச் சிறந்த மருத்துவ வசதிகள் உள்ளன. ஸ்ரேயாஸ் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க மாட்டார்.
அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மிக விரைவில் அவர் களத்திற்கு திரும்புவார். அவரது உடல் நிலை குறித்த விபரங்கள் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் இருந்து வருகிறார். தற்போது அவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதால், அவர் சில வாரங்களுக்கு ஓய்வில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கொல்கத்தா அணியின் புதிய கேப்டன் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.