ஆஸ்திரேலியாவில் திடீரென பிரபலம் அடைந்த மதுரை பன் பரோட்டா… காரணம் இவர் தான்..…

Share

மதுரை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உணவு பிரியர்களை கவர்ந்த மதுரை பன் பரோட்டா, தற்போது ஆஸ்திரேலியாவிலும் ஃபேமஸ் ஆகத் தொடங்கியுள்ளது. அது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மதுரையில் மைதா பரோட்டா தொடங்கி, செட் பரோட்டா, சில்லி பரோட்டா பனீர் பரோட்டா, எண்ணெய் பரோட்டா என வகை வகையாக பரோட்டாக்கள் கிடைக்கின்றன. உணவுப்பிரியர்கள் குறிப்பாக பரோட்டா பிரியர்களின் சொர்க்கபுரியாக மதுரை உள்ளது.

அதிலும் குறிப்பாக பன் பரோட்டா மதுரைக்காரர்களின் ஃபேவரிட். மைதாவுடன் முட்டை, பால் சேர்த்து எண்ணெயை 30 நிமிடங்கள் ஊற்றி, மாவு ஊர வைக்கப்படும். இதன்பின்னர் பன் போன்று உருட்டி எண்ணெயில் பொரித்து பன் பரோட்டா சமைக்கப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல சமையல் கலை நிபுணர் கேரி மெஹிகன் பன் பரோட்டா குறித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ஆஸ்திரேலியர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியுள்ளார்.

இந்தியாவுக்கு சமீபத்தில் வந்த மெஹிகன் மதுரைக்கு சென்றுள்ளார். அங்கு உள்ளூர் உணவுகளை ருசி பார்த்த மெஹிகனுக்கு பன் பரோட்டா மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. ஓர் உணவகத்திற்கு சென்ற அவர் அங்கு பரோட்டா வீசப்படுவதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இதற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. இதேபோன்று சாலையோர கடைகளுக்கு சென்று அங்குள்ள பதார்த்தங்களையும் ருசி பார்த்த மெஹிகன் அவற்றையும் இன்ஸ்டாவில் அப்டேட் செய்திருக்கிறார்.

இதையும் படிங்க – தினமும் ஒரு கிளாஸ் பால் குடிக்க சொல்வதற்கு இந்த 7 நன்மைகள்தான் முக்கிய காரணம்..!

பன் பரோட்டா மொறுமொறுப்பாகவும், ருசியாகவும் இருப்பதாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள மெஹிகன், அதற்கான கிரேவியையும் ஆஹா ஓஹோவென புகழ்ந்துள்ளார்.

இதையும் படிங்க – 30 வயதை கடந்தாலும் இளமையா இருக்கனுமா..? அப்போ உங்க உணவு முறையை இப்படி மாத்திக்கோங்க..!

இந்த பதிவுகளை மதுரைக்காரர்கள் சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்ஆப்பில் பரவ விட்டுள்ளனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com