சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அண்மை காலமாக ஆவின் பால் மற்றும் உப பொருட்களின் விநியோகத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 14 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கிட்டத்தட்ட 10 லட்சம் லிட்டர் பால் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் பால் மற்றும் இதர பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.ஆவின் நிறுவனத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே உள்ளது. எனவே, முதல்வர் ஆவின் நிறுவன செயல்பாடுகள் குறித்து உடனடியாக ஓர் ஆய்வினை மேற்கொண்டு, அங்கு நிலவும் அனைத்து குழப்பங்களை தீர்க்கவும், ஆவின் பால் மற்றும் அதன் பொருட்கள் தங்கு தடையின்றி மக்களுக்கு கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டுமென்று அதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
ஆவின் பால் மற்றும் அதன் பொருட்கள் மக்களுக்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
Share