ஆழியாறு – ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டம்: “தமிழ்நாடு – கேரளா நட்பு முறியும்” – ஏன் எதிர்ப்பை சந்திக்கிறது?

Share

  • மோகன்
  • பிபிசி தமிழுக்காக

ஆழியாறு
படக்குறிப்பு,

ஆழியாறு – கோப்புப்படம்

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஆழியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீர் எடுத்துச் செல்லும் புதிய திட்டம் ஒன்று தயாராகிவந்தது. தற்போது அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒப்பந்தமும் கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. பொள்ளாச்சி, ஆழியாறு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஒருபுறம் போராடி வருகிற நிலையில் கேரளாவிலும் இந்த திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஜூலை 1-ம் தேதி ஆழியாறு மற்றும் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் துறை அதிகாரிகளைச் சந்தித்து இந்த திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

ஆழியாறு – பரம்பிக்குளம் திட்டம் என்பது என்ன?

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com