ஆளுநர் ரவி Vs முதல்வர் ஸ்டாலின்: மீண்டும் முற்றும் மோதல் – முன்னாள் கர்னல், ஆளுநரின் சர்ச்சை பேச்சு, பொங்கிய திமுக அமைச்சர்

Share

பொன்முடி ஸ்டாலின் ஆளுநர் ரவி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரர் ஒருவர் தி.மு.க. நிர்வாகி உள்ளிட்டவர்களால் தாக்கிக் கொல்லப்பட்டது குறித்த கண்டனக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் மீது தாக்குதல் நடத்த வைத்துவிடாதீர்கள் என ராணுவத்தின் முன்னாள் கர்னல் ஒருவர் பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ராணுவ வீரர் பிரபுவின் படுகொலையை கண்டித்தும் பா.ஜ.கவின் பட்டியல் அணி மாநிலத் தலைவர் தடா பெரியசாமியின் வீடு தாக்கப்பட்டதைக் கண்டித்தும் தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நேற்று (பிப்ரவரி 21) உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் ராணுவத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

அதில் கலந்து கொண்ட பா.ஜ.கவின் தேசியக் குழு உறுப்பினரும் முன்னாள் ராணுவ வீரருமான கர்னல் பாண்டியன் என்பவர் பேசிய பேச்சுகள்தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com