ஆளுநர் மாளிகையின் மாண்பைக் காக்க 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

Share

சென்னை: ஆளுநர் மாளிகையின் மாண்பைக் காக்க 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான கோப்பில் ஆளுநர் கையெடுத்து இட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவு: பேரறிவாளன் வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் 7 தமிழர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்காததற்காக தமிழக ஆளுனர் மாளிகையை கடுமையாக விமர்சித்திருக்கிறது. ஆளுனரின் நிலை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று கண்டித்திருக்கிறது. உச்சநீதிமன்றம் இப்படி விமர்சிக்கும் நிலையை தமிழக ஆளுநர் மாளிகை ஏற்படுத்தியிருக்கக்கூடாது. 7 தமிழர் விடுதலை குறித்து ஆளுனர் மாளிகை முன்கூட்டியே முடிவெடுத்திருக்க வேண்டும். ஆளுநர் 4 நாட்களில் சரியான பதிலளிக்கவில்லை என்றால் பேரறிவாளனை உச்சநீதிமன்றமே விடுதலை செய்யக்கூடும். பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தால் அது ஆளுநர் மாளிகைக்கு அவப்பெயர் தேடித்தரும். அந்த நிலையை தவிர்த்து ஆளுநர் மாளிகையின் மாண்பை காக்க பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான கோப்பில் ஆளுநர் உடனடியாக கையெழுத்திட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com