ஆளுநர் பதவியை ரத்து செய்யக் கோரி, கேரளாவை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி பினோய் விஸ்வோம் நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா கொண்டு வர மாநில அவைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் .
நாடு முழுவதும் பாஜக ஆளாத மாநிலங்களில் அரசுக்கும், ஆளுநர்களுக்கும் இடையே அதிகார மோதல் போக்கு உள்ளது. இதனை சரி செய்யும் நோக்கில், சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால கெடு நிர்ணயிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை பாஜக ஆளாத மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு டெல்லி, கேரளா மற்றும் மேற்குவங்க முதலமைச்சர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆளுநர் பதவியை ரத்து செய்யக் கோரி கேரளாவை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பினோய் விஸ்வோம் மாநிலங்களவையில் தனிநபர் மசோதா அறிமுகம் செய்வதற்கான நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க; கொடநாடு விவகாரத்தில் என்ன செய்தீர்கள்… சட்டப்பேரவையில் முதல்வர், எடப்பாடி பழனிசாமி காரசார விவாதம்
பொதுவாக, அரசின் அமைச்சரவையில் இல்லாத உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் மசோதா தனிநபர் மசோதா ஆகும். பொதுவாக இத்தகைய மசோதாக்கள் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டு விவாதிக்கப்படும். மசோதா அறிமுகப்படுத்துவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக இதற்கான நோட்டீஸ்-ஐ உறுப்பினர் அளிக்க வேண்டும்.
அந்த வகையில், ஆளுநர் பதவியை ரத்து செய்யக் கோரி, கேரளாவை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பினோய் விஸ்வோம் மாநிலங்களவைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.கேரளாவில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.