ஆர்யன் அசாரி: ஆமதாபாத் விமான விபத்தை வீடியோ எடுத்த 17 வயது சிறுவன் தற்போது எப்படி இருக்கிறார்?

Share

ஏர் இந்தியா விமான விபத்து, ஆமதாபாத் வீடியோ
படக்குறிப்பு, ஆர்யன் பதிவு செய்த வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட படம்.

ஒவ்வொரு முறையும் விமானத்தின் ஓசையைக் கேட்டவுடன், ஆர்யன் அசாரி விமானத்தைப் பார்க்க வீட்டை விட்டு வெளியே ஓடுவார். விமானங்களைப் பார்ப்பது அவருக்கு ஒரு பொழுதுபோக்காக இருந்தது என்று அவரது தந்தை மகன்பாய் அசாரி கூறினார். ஆர்யனுக்கு என்ஜின் ஓசை மிகவும் பிடித்தது.

அந்த விமானம் (விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்) வானில் பறந்த போது என்ஜினின் ஓசை அதிகரித்து, வானில் என்ஜினிலிருந்து புகை வெளியானது. ஆனால், இப்போது இந்த விஷயத்தை நினைத்தாலே அவர் பாதிக்கப்படுகிறார்.

அந்த வியாழக்கிழமை (ஜூன் 12), 17 வயதான ஆரியன் அசாரி ஆமதாபாத்தில் உள்ள தனது வீட்டின் மாடியில் இருந்தார். அவர் விமானங்கள் பறப்பதை வீடியோவில் பதிவு செய்து கொண்டிருந்தார்.

அப்போது, ஏர் இந்தியாவின் 787-8 ட்ரீம்லைனர் விமானம் அவரது கண் முன்னே விழுந்து நொறுங்கி, தீப்பிடித்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உயிரிழந்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com