பண்டிகைகளோட ஹைலைட்ஸ்ல ஒண்ணு, சந்தோஷ நினைவுகளை உருவாக்குறது. அப்படி, சில செலிப்ரிட்டீஸ்கிட்ட அவங்களோட ஹேப்பி தீபாவளி மெமரீஸ் கேட்டோம்…
ஆர். ஜே தீபக்
“எனக்குப் பட்டாசு போட ரொம்பப் பிடிக்கும். ஆனா, எங்க வீட்ல ஒரு ரூல் இருக்கும். பட்டாசு பாக்ஸை தீபாவளி அன்னைக்குத்தான் பிரிக்கணும்னு சொல்லுவாங்க. ஆனா, என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் தீபாவளிக்கு நாலு, அஞ்சு நாள் முன்னாடியே பட்டாசு வெடிக்க ஆரம்பிச்சிருவாங்க. நானும் அவங்களோட சேர்ந்து, அவங்களோட பட்டாசை வெடிப்பேன்.
ஒரு தடவை, “டேய் கவனிச்சீங்களா..? இவன் பட்டாசு கொண்டு வராம நம்ம பட்டாசையே காலி பண்றான்’னு ஒருத்தன் என்னை ஓசிப் பட்டாசு ஆக்கிப் பேசிட்டான். ’ஆமாடா…’னு சொல்லி, யாரும் எனக்குப் பட்டாசு தரல. அந்த அவமானத்தோட நேரா எங்க வீட்டுக்குப் போனேன். யாருக்கும் தெரியாம பட்டாசை ஒரு தொப்பிக்குள்ள வெச்சு, அதை தலையில மாட்டிக்கிட்டு வெளிய ஓடிட்டேன். ஒவ்வொரு தீபாவளிக்கும் இப்டித்தான் தொப்பி பட்டாசு வெடிச்சிட்டு இருந்தேன். ஒரு முறை போட்டி போட்டு வெடி வெடிச்சப்போ, என் ஃப்ரெண்ட் கையில பட்டாசு வெடிச்சுடுச்சு. எங்க வீட்டுல எனக்கு முதுகுல பட்டாசு போட்டுட்டாங்க. கொடுமை என்னனா… இதை மெமரீஸ்னு மட்டும் சொல்லிட முடியாது. இப்பவும் எங்கம்மா, பட்டாசை பதுக்கித்தான் வெச்சிருக்காங்க!”
நான் வளர்ந்துட்டேனே மம்மி!