செய்முறை
1. குருணை அரிசியை தண்ணீரில் இரண்டு முறை கழுவி விட்டு தண்ணீரை முழுவதும் வடித்துக் கொள்ளவும்.
2. ஒரு குக்கரில் புளித்த நீராகாரத்தை ஊற்றி கொதிக்க விடவும். நீராகாரம் நன்கு கொதித்ததும் கறிவேப்பிலை சேர்த்து வாசம் வந்ததும் குருணை அரிசியை சேர்த்துக் கலந்து வேகவிடவும்.
4. பின் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
5. அரிசி பாதி வெந்ததும் புளித்த மோர் சேர்த்து கலந்து மேலே நல்லெண்ணெய் விட்டு கிளறி 2 விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும். குக்கரில் இருக்கும் ஆவி தானாக அடங்கியதும் சாதத்தை மெதுவாக கிளறி பரிமாறும் பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.
உங்கள் கவனத்துக்கு…
இந்தச் சாதத்தில் கறிவேப்பிலையோடு இரண்டு நார்த்தங்காய் இலைகளும் சேர்க்கலாம். குருணைஅரிசிக்கு பதில் புழுங்கலரிசி அல்லது சிறுதானிய அரிசி (சாமை, வரகு, குதிரைவாலி) வைத்தும் பொங்கலாம்.
கறிவேப்பிலை தேங்காய் துவையல்
தேவையான பொருட்கள்
தேங்காய்த்துருவல் – 1 கப்
புளி – சிறிய எலுமிச்சை அளவு
மிளகாய் வற்றல் – 10
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
கல் உப்பு – தேவையான அளவு
செய்முறை
1. புளியை பத்து நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும். பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த புளி, கல் உப்பு, மிளகாய் வற்றல் மற்றும் தேங்காய்த்துருவல் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
2. அதோடு கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
3. சூடான நீத்தண்ணீர் சாதத்தில் இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய், கறிவேப்பிலை துவையல் சேர்த்து கலந்து நார்த்தங்காய் ஊறுகாய் தொட்டு சாப்பிட்டு பாருங்கள்.
இப்படி எளிதாகவும் விரைவாகவும் செய்யும் ஆரோக்கிய உணவும் ஓர் விருந்துதான். இது போல மற்றுமோர் அறுசுவை அனுபவ விருந்தோடு சந்திப்போம்!