ஆரம்ப சுகாதார நிலையமா, மருத்துவமனையா… பிரசவத்திற்கு பெண்கள் விரும்புவது எதை; ஆய்வு சொல்வதென்ன?| Research says woman prefer bigger hospitals for delivery instead of phc

Share

பிரசவத்தின் போது கணவர் அருகில் இருக்க வேண்டும் என்பது பல பெண்களின் விருப்பமாக இருக்கும். அதேபோல தங்களது பிரசவம் எங்கு நடக்க வேண்டும் என்பதையும் பெண்கள் தேர்வு செய்வதுண்டு.

அந்த வகையில், தமிழக பெண்கள் பலரும் தங்களது பிரசவம் ஆரம்ப சுகாதார மையங்களில் இல்லாமல், மாவட்ட அரசு மருத்துவமனை அல்லது மருத்துவக்கல்லூரி போன்ற பெரிய மருத்துவமனைகளில் இருக்க வேண்டும் என்று விரும்புவதாக பொது சுகாதார இயக்குநகரத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது.

Pregnant (Representational image)

Pregnant (Representational image)
pixabay

தமிழகத்தில் இது தொடர்பாக, 2022 ஆகஸ்டு மாதம் பிரசவித்த 1,143 தாய்மார்களை அணுகி ஆய்வுக்காக கருத்து கேட்கப்பட்டது. இவர்களில் 865 பேர் ஆய்வில் பங்கேற்றனர். இவர்களில் 538 பேர் (62 சதவிகிதம்) பொது மருத்துவமனைகளில் பிரசவித்துள்ளனர். பொது மருத்துவமனையில் குழந்தை பெற்றவர்களில் 75 சதவிகிதம் பேர், கிராமப்பகுதிகளில் பிரசவித்தவர்கள்.

ஆய்வின் முடிவில்…

*ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநிலத்தின் முதல் வரிசை சுகாதார வசதிகளில் ஒன்றாக இருப்பவை. இங்கு கர்ப்பிணிகள் பதிவு செய்யலாம், தடுப்பூசிகள், மருந்துகளைப் பெறலாம். மகப்பேறு சலுகைகளை அனுபவிக்கலாம்.  வீட்டிற்கு அருகில் உள்ள அவற்றில் கூட்டமும் அதிகமாக இருக்காது. 

*ஆனால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அல்லது மாவட்ட தலைமையக மருத்துவமனைகள் போன்ற பெரிய மருத்துவமனைகளில் பிரசவங்கள் நடத்தப்பட வேண்டும் என்றே பல பெண்களும் விரும்புகின்றனர்.

*தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்ற பெண்கள் கூட, பிரசவத்திற்கு முந்தைய சேவைகளை உள்ளூர் ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்து பெற்றுள்ளனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com