ஆரணி: காலை உணவில் விழுந்த பல்லி? – கவனக்குறைவாகச் செயல்பட்ட சமையலர்கள் – 13 மாணவர்களுக்குச் சிகிச்சை | food poisoned by a lizard – government school students affected

Share

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகேயுள்ள கெங்காபுரம் கிராமம் சமத்துவபுரத்தில், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 25 மாணவ – மாணவிகள் பயில்கிறார்கள். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் இந்தப் பள்ளியிலும் உணவு சமைத்து வழங்கப்படுகிறது. இன்று காலை வழக்கம்போல, ‘உப்புமா’ சமைத்து வழங்கப்பட்டது. அதைச் சாப்பிட்டுவிட்டு வகுப்பறையில் அமர்ந்திருந்த 13 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் போன்ற உபாதைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆசிரியர்கள் உடனடியாக மாணவர்கள் அனைவரையும் மீட்டு… அருகிலுள்ள பெரியக்கொழப்பலூர் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு ஆரணி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

சிகிச்சைப் பெறும் மாணவர்கள்

சிகிச்சைப் பெறும் மாணவர்கள்

சிகிச்சைக்குப் பிறகு மாணவர்கள் நலமுடன் இருக்கிறார்கள். யாரும் ஆபத்தான சூழலில் இல்லை. ஆனாலும், காலை உணவு சாப்பிட்ட பிறகே அவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டதால், கல்வி அலுவலர் தொடக்கப்பள்ளிக்கு விரைந்து சென்று, ஆய்வு நடத்தினார். கவனக்குறைவாகச் செயல்பட்ட சமையலர்களிடமும், பள்ளி ஆசிரியர்களிடமும் விசாரணை மேற்கொண்டார். அப்போது உணவில் தவறுதலாக ‘பல்லி’ விழுந்திருக்கலாம். அதை கவனிக்காமல் சமைத்து மாணவர்களுக்குப் பரிமாறியிருக்கலாம் என முதற்கட்டமாகத் தெரியவந்திருக்கிறது. ஆனாலும், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களும் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பிலேயே இருக்கிறார்கள். பெற்றோர்களும் பதறிவிட்டனர். இந்தச் சம்பவத்தால், அப்பகுதியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com