ஆமதாபாத் விமான விபத்து: எஞ்சின்களின் நிலை பற்றி ஏர் இந்தியா கூறிய தகவல் என்ன?

Share

ஆமதாபாத்: விபத்துக்குள்ளான விமானத்தின் எஞ்சின்களின் நிலை பற்றி ஏர் இந்தியா கூறிய தகவல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த ஜூன் 12ஆம் தேதியன்று ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் AI171 விமானம் விபத்துக்குள்ளானது.

கடந்த வாரம் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் ஒரு எஞ்சின் புதியது என்றும் மற்றொரு எஞ்சினை சர்வீஸ் செய்வதற்கு வரும் டிசம்பர் மாதம் வரை காலக்கெடு இருந்ததாகவும் ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்திய செய்தி சேனல் ஒன்றுக்கு ஏர் இந்தியா தலைவர் என் சந்திரசேகரன் அளித்த பேட்டியில், விமானத்தின் இரண்டு எஞ்சின்களும் கடந்த காலங்களில் “நல்ல நிலையில் இயங்கியதாக” தெரிவித்துள்ளார்.

“விமானத்தின் வலதுபுற எஞ்சின் கடந்த மார்ச் மாதம் புதிதாக மாற்றப்பட்டது. இடதுபுற எஞ்சின் கடந்த 2023ஆம் ஆண்டில்தான் சர்வீஸ் செய்யப்பட்டது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம்தான் அந்த எஞ்சினுக்கு அடுத்த பரமாரிப்புப் பணியை மேற்கொள்ள வேண்டியிருந்தது,” என அவர் டைம்ஸ் நவ் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 12ஆம் தேதியன்று லண்டன் நோக்கிப் புறப்பட்ட போயிங் 787-8 ட்ரீம்லைனர் வகை AI171 எனும் விமானம், ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒரு நிமிடத்திற்கு உள்ளாகவே விபத்துக்குள்ளானது. இதில், குறைந்தது 270 பேர் கொல்லப்பட்டனர், இவர்களில் பெரும்பாலானோர் பயணிகளே.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com