ஆப்கானிஸ்தான்: தாலிபன்களின் கல்வி தடைக்கு எதிராகத் தனி ஆளாகப் போராடும் 18 வயது பெண்

Share

Adela

பட மூலாதாரம், Adela

“என்னுடைய கோரிக்கை நீதிக்கானது என்பதால் எனக்கு அச்சம் ஏதுமில்லை,” என்கிறார் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 18 வயது இளம் பெண்.

தாலிபன் ஆட்சியாளர்கள் பெண்களின் உயர் கல்விக்கு எதிராக விதித்துள்ள தடையால், பட்டம் பெற வேண்டும் என்ற அந்த இளம் பெண்ணின் லட்சியம் வெற்றி பெறவில்லை.

இந்த தடையால் தனக்கு எதிர்காலமே இல்லாமல் போய்விடும் என்று ஏற்பட்ட கோபத்தால் போராடும் அந்த இளம் பெண்ணின் பாதுகாப்பு கருதி அவரது பெயரை நாங்கள் மாற்றி குறிப்பிட்டிருக்கின்றோம். அசாதாரணமான முறையில் தனி ஒரு ஆளாக காபூல் பல்கலைக்கழகத்தின் முன்பு குர்ஆனிலிருந்து மேற்கோள் காட்டிய வார்த்தைகளோடு அவர் போராடினார்.

தனி நபர் போராட்டம்

டிசம்பர் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று அடேலா, தனது பல்கலைக்கழகத்தின் நுழைவாயில் முன்பு ‘படி’ எனப் பொருள்படும் அரேபிய வார்த்தை எழுதப்பட்ட ஒரு பதாகையைப் பிடித்தபடி நின்றிருந்தார். முஹம்மது நபிக்கு கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட முதல் வார்த்தை இதுதான் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.


“கல்விக்கான உரிமையை கடவுள் எங்களுக்குக் கொடுத்திருக்கின்றார். நாம் கடவுளுக்கு பயப்பட வேண்டிய தேவை இருக்கிறது. தாலிபன்களை கண்டு பயப்படத் தேவையில்லை. அவர்கள் எங்கள் உரிமைகளைப் பறிக்க விரும்புகின்றனர்,” என பிபிசி ஆப்கன் சேவையிடம் அவர் கூறினார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com