ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாகிஸ்தானுக்கு தகவல் அளித்தது எப்போது? – சிடிஎஸ் அனில் சௌகான் புதிய தகவல்

Share

ஜெனரல் அனில் செளகான்
படக்குறிப்பு, இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் செளகான்

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, தீவிரவாத முகாம்களை தாக்கும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்ட இந்தியா, நடவடிக்கை முடிந்த ஐந்து நிமிடத்திலேயே இது குறித்து பாகிஸ்தானுக்குத் தெரிவித்துவிட்டதாக இந்தியப் பாதுகாப்புப் படைத் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் செளகான் தெரிவித்துள்ளார்.

நேற்று (2025 ஜூன் 3 ), புனேயில் சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் ‘எதிர்காலப் போர்கள் மற்றும் போர்முறை’ என்ற தலைப்பில் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் செளகான் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.

“நாம் தாக்குதல் நடத்திய அதே நாளில் (மே 7) அந்தத் தகவலை பாகிஸ்தானுக்கு தெரிவித்துவிட்டோம். இரவு 1 மணி முதல் 1:30 மணி வரை தாக்குதல் நடத்தினோம். தாக்குதல் முடிந்த ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தானிடம் தெரிவித்தோம்” என்றார்.

எல்லை தாண்டி நடத்திய தாக்குதலின் போது இந்திய ராணுவம் ‘மிகவும் பகுத்து ஆராய்ந்து’ செயல்பட்டதாக ஜெனரல் செளகான் கூறினார். ‘பயங்கரவாத மறைவிடங்களை மட்டுமே தாக்கினோம், பொதுமக்கள் மற்றும் ராணுவ இலக்குகளுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தவிர்த்தோம்,’ என்று அவர் கூறினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com