ஆன்லைன் டாக்டர் – குறுங்கதை | My Vikatan | My Vikatan short story about online doctor consultation

Share

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

அன்பர் சீக்காளி ஆன்லைனில் டாக்டர் அப்பாய்ண்ட்மென்ட்-க்கு பணம் செலுத்தியப் பின் குறிப்பிட்ட நேரத்தில் போனில் பேச ஆரம்பிக்கிறார்.  

‘ஹலோ, ஹலோ, நலமேகம் டாக்டருங்களா?. என் பேரு சீக்காளி’.

‘வணக்கம். கன்சல்டன்சிக்கு வீடியோ கால்ல வாங்க. வழவழன்னு இல்ல கொழகொழன்னு இல்லாம சீக்கிரமா உங்கப்  பிரச்சினை என்னன்னு சொல்லுங்க!’.

‘பிரச்சினை கொட்டிக் கிடக்குது டாக்டர். தலைக்கு மேலே பிரச்சினை , தலைக்குக் கீழே பிரச்சினை. வீட்டுக்கு உள்ளே ஒரு பிரச்சினை, வெளியேப் போனா ஒரு பிரச்சினை. ‘

‘உங்க பிரச்சினையை தெளிவா, விளக்கமா சொல்லுங்க. டைம் வேஸ்ட் பண்ண வேணாம்.’

‘சொல்றேங்க. வீட்டுலே ஒய்ப் அத செய்யி, இத செய்யின்னு சொல்றா. சும்மா இருக்க விடுறதது இல்ல. பசங்க நான் சொல்றத கேக்குறதில்ல. வெளியே நான் கடன் கொடுத்ததைக் கேட்கப் போனா ஆசாமி எஸ்கேப். பைனான்ஸ் கம்பெனி மூலமா நான் வாங்கின காருக்கு தவணை ஒண்ணு கட்டலேன்னு அவன் வந்து மிரட்றான். இப்படி விதவிதமா பிரச்சினை.

‘யோவ், இதெல்லாம் உன் சொந்த குடும்ப தனிப்பட்டப் பிரச்சினைப்பா. உன் உடம்புக்கு என்னப் பிரச்சினைன்னு கரெக்டா சொல்லுப்பா!.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com