ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பிய ஆளுநர் – 3 முக்கிய காரணங்கள் இவைதான்

Share

ஆளுநர் ரவி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் அரசுக்கே அனுப்பியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என். ரவி.

இந்த விவகாரத்தில், தமிழ்நாடு சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மசோதாவை திருப்பி அனுப்புவதற்கான தமது நிலைப்பாட்டையும், சைபர் அணுகல் விவகாரத்தில் ஒரு மாநில அரசால் மட்டும் ஆன்லைன் சூதாட்டம் போன்ற இணையதொடர்பு நடவடிக்கைகளை தடை செய்ய முடியாது என்ற யதார்த்த நிலையையும் ஆளுநர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா திருப்பி அனுப்பப்பட்டது குறித்த அதிகாரபூர்வ தகவலை ஆளுநர் அலுவலகமோ அரசோ வெளியிடவில்லை. அரசு வட்டாரங்களில் இருந்து வெளிவந்துள்ள ஆளுநரின் கடிதம் தொடர்பான தகவல் தெரிய வந்துள்ளது. அதன் விவரம்:

“மாநில அரசுக்கு அதிகாரமில்லை”

பட மூலாதாரம், Getty Images

“ஆன்லைன் சூதாட்ட தடை விவகாரம் கவலை அளிக்கும் அதே வேளையில், ஆன்லைன் கேமிங் மற்றும் சூதாட்டத்தை ஒழுங்குமுறைப்படுத்தாத காரணத்தால்தான் பலரும் அந்த விளையாட்டுக்கு அடிமையாகி பணத்தை இழந்து சிலர் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது.”

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com