ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா விவகாரம் டிச.29ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை: முத்தரசன் பேட்டி

Share

சென்னை: தமிழ்நாடு  ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் முத்தரசன் அளித்த பேட்டி: ஒன்றிய அரசு தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், ஆளுநர்களை கொண்டு போட்டி அரசாங்கம் நடத்தி வருகிறது. உலகத்தில் பல நாடுகள் மதம் சார்ந்த நாடுகளாக இருக்கிறது. அதேபோல இந்தியாவும் இந்து நாடு, திருக்குறள் இந்து மதத்தின் நூல் என பேசுகிறார். ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் தினமும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதை தடுக்க கொண்டு வரப்பட்ட சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். எனவே, டிச. 29ம் தேதி ஆளுநர் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்கிறார் என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com