அவர் சொல்லச் சொல்ல ஒவ்வொரு வழிமுறையையும் பின்பற்றியுள்ளார். பணப்பரிவர்த்தனை தோல்வியில் முடிந்தது எனக் கூறி அந்த நபர் அழைப்பைத் துண்டித்துள்ளார்.
அப்பெண்ணின் அக்கவுன்ட்டில் இருந்து 3,09,337 ரூபாய் எடுக்கப்பட்டிருப்பது பிறகே தெரிந்தது. மீண்டும் அந்த நபரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது, முடியாமல் போனது.

தான் ஏமாற்றப்பட்டு இருப்பதை உணர்ந்த அப்பெண் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 420 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் தொடர்புடைய பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார். காவல்துறை அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.