ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை பாதித்த கோவிட் தொற்று; ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Share

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்தணுக்களின் தரம் பாதிக்கப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள், அக்டோபர் 2020 முதல் ஏப்ரல் 2021 வரை, எய்ம்ஸ் பாட்னா மருத்துவமனையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 19 முதல் 45 வயதுக்குட்பட்ட 30 ஆண்களைத் தேர்ந்தெடுத்து சோதனையை மேற்கொண்டனர்.

Representational Image

அவர்களிடமிருந்து விந்தணுக்கள் சேகரிக்கப்பட்டு முதல் சோதனை நடத்தப்பட்டது. இரண்டாவது சோதனை 74 நாள்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டது. 

முதல் சேகரிப்பின் சோதனையில், விந்தணுவில் கொரோனாவின் பாதிப்பு இல்லை என்றாலும், விந்தணுககளின் எண்ணிக்கையும் அவற்றின் இயக்கமும் குறைவாக இருந்துள்ளது. அதுவே இரண்டாவது சோதனையில் இதற்கு நேர்மாறாக விந்தணுக்களின் எண்ணிக்கை, அவற்றின் இயக்கம் மற்றும் அளவு வெகுவாக பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.  

இம்முடிவுகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “சோதனையில் ஆண்களிடமிருந்து பெறப்பட்ட விந்துவில் SARS – CoV-2 நோய்த் தொற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும், இரண்டாவது மாதிரி எடுக்கப்படும் வரை விந்தின் தரம் மோசமானதாகவே இருந்தது. 

இனப்பெருக்க தொழில்நுட்ப கிளினிக்குகள் மற்றும் விந்தணு வங்கிகள், SARS-CoV-2 – வால் பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்தணுவின் தரம் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை அவர்களிடமிருந்து விந்தணுவைப் பெறுவதிலிருந்து விலக்கி வைக்க வேண்டும். கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்தணுக்களைப் பரிசோதிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர். 

இந்த ஆய்வு குறித்த முடிவுகள் கியூரியஸ் என்ற மருத்துவ இதழில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com