ஆட்டிசம் பாதிக்கப்பட்ட பெண்… பிரசவ அறைக்குள் அனுமதிக்கப்பட்ட நாய்; நெகிழ்ச்சி கதை!| Woman With Autism Gives Birth To Son With The Help Of Her Dog

Share

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், நாயின் உதவியுடன் குழந்தை பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இங்கிலாந்தில் வசித்து வரும் அமீ டோம்கின் என்பவர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர். இவர் 2 வயது புல் டெர்ரியர் இனத்தைச் சேர்ந்த பெல் (Belle) என்ற பெண் நாயை வளர்த்து வருகிறார். இவருக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதால், இவரைப் பார்த்துக் கொள்ளும் முழு வேலையையும் இந்த நாய் தான் கவனித்து வந்துள்ளது. இவர் கர்ப்பகால மருத்துவ பரிசோதனைகளிலும் கூடவே இருந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இவர் பிரசவத்தின் போதும் பிரசவ அறைக்குள் கூடவே இருந்துள்ளது. முதன்முறையாக இங்கிலாந்தின் பிரசவ அறைக்குள் அனுமதிக்கப்பட்ட நாய் பெல் தான் என்று கூறப்படுகிறது. 

இந்தச் சம்பவம் குறித்து அமீ டாம்கின் கூறுகையில், “கடைகளுக்கோ, மருத்துவரைச் சந்திக்கவோகூட நான் மாதக்கணக்கில் வீட்டை விட்டு வெளியே செல்லமாட்டேன். பெல் எனக்குப் பல வழிகளில் உதவும். நான் அதிக பதற்றமடையும் போது, அருகில் உள்ள எக்ஸிட் வழிக்கு வழிநடத்திச் செல்லும். 

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com