அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட 2019-20ம் ஆண்டிற்கான கலைமாமணி விருதுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவு

Share

மதுரை: 2019-2020ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகளை திரும்பப் பெற உத்ராவிடக் கோரி மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கனது தொடரப்பட்டுருந்தது. கலைமாமணி விருதுகள் குறித்து விசாரணை தற்போது பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2019 – 2020ம் ஆண்டில் அதிமுக வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகள் குறித்து புதிய தேர்வு குழு அமைத்து உத்தரவிட கோரி அவசர கதியில் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டதால் ரத்து செய்ய வேண்டும் என கோரி தாக்கல் செய்த மனு மீது உயர்நீதி மன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. சமுத்திரம் என்பவர் இந்த வழக்கு தொடர்ந்திருந்தார் . 2019 – 2020ம் ஆண்டு தகுதி இல்லாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப் பட்டதாகவும் மனுவில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சமுத்திரம் என்பவர் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கினை தாக்கல் செய்துருந்தார். அந்த பொதுநல வழக்கின் முக்கிய சாரம்சம் என்பது தமிழ்நாடு அரசு சார்பாக இயல், இசை, நாடகமன்றம் ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மன்றம் சார்பாக சிறந்த கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது என்ற உயரிய விருதினை வழங்கி வருகின்றது. இந்நிலையில் இந்த விருது என்பது 5 பிரிவின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது, குறிப்பாக 18 வயது கீழ் ஒரு பிரிவும், 19 முதல் 35 வயது உள்ள பிரிவினர்க்கு வளர்மதி என்ற பிரிவும், 36 முதல் 50 வயது உள்ள நபர்களுக்கு ஒரு விருதும், 51 வயது முதல் 60 வயது உள்ளவர்களுக்கு ஒரு விருதும், 61 வயதிற்கு மேலுள்ளவர்க்கு ஓவர் விருதும் என இந்த ஐந்து பிரிவின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு இந்த விருதினை வழங்கி வருகிறது.

இந்த விருது என்பது தமிழ்நாட்டின் அரசுடைய முக்கிய விருதாகவும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த விருது கடந்த 2019 – 2020ம் ஆண்டிற்கான விருது, 2021ம் ஆண்டு இரண்டாவது மாதம் வழங்கப்பட்டது. இந்த விருது தேர்வு செய்யப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக அவசரகதியில் அரசனை பிறப்பிக்கப்பட்டு அந்த விருதிற்கு உரியவர்களை தேர்வு செய்யாமல், பணம் பெற்று கொண்டு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கியதை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் தேர்வு குழு அமைத்து உரியநபர்களுக்கு இந்த விருதினை வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தற்போது நீதிபதி மஹாதேவன், சத்திய நாராயண பிரசாத், ஆகியோர் முன்நிலையில் விசாரணைக்கு வரப்பட்டது. விசரணையின் போது பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும், இந்த வழக்கில் எழுப்பிருந்தனர். தமிழ்நாடு அரசு சார்பாக உரிய விளக்கம் தெரிவிக்கப்பட்டது, கடந்த ஆட்சியின் போது இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதில் ஏதேனும் முறைகேடுகள் உள்ளதா என்பது குறித்து தற்போது கமிட்டி அமைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. அதே போல மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பாலமுருகன் என்ற பலமுருகப்பாண்டி ஆஜராகி அதற்கான சான்றுதலை சமர்ப்பித்தார், அவசரகதியில் வழங்கப்பட்டதால் அந்த கலைமாமணி விருது வழங்கப்பட்ட சான்றுதலில் தலைவர்கள் கையெழுத்து இல்லாமல் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என குறித்து அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என வாதாடினார்.

இந்த வழக்கு என்பது தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுருந்தது, தற்போது தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் மஹாதேவன், சத்திய நாராயண பிரசாத், இந்த குற்றச்சாட்டில் கலைமாமணி விருது வழங்கிய குற்றச்சாட்டு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்பது குறித்து தேவைப்படும் பச்சத்தில் உரிய தேர்வு குழு கமிட்டி அமைத்து ஆய்வு செய்யலாம் என்று உத்தரவு பிறப்பித்து உள்ளனர். மேலும் இந்த விருதுகள் வழங்கப் பட்டவர்களுக்கு உரிய கால அவகாசம் வழங்கி அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு உரிய ஆய்வு நடத்தி, உரிய முடிவை தமிழ்நாடு அரசு எடுக்கலாம் என்று தற்போது உத்தரவை பிறப்பித்துள்ளனர்.     

 

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com