
காலையில் எழுந்தவுடன் வெறும் தண்ணீரை முகத்தில் அடித்துக் கழுவவும். இதற்குக் குளிர்ந்த நீரோ, சுடு தண்ணீரோ வேண்டாம். வழக்கமான குழாய்த் தண்ணீரே போதுமானது. இப்படிச் செய்வதால் முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து நாள் முழுக்க ஃபிரெஷ்ஷாக உணரலாம்.

நன்கு வியர்க்கும்படி உடற்பயிற்சி, யோகா அல்லது நடைப்பயிற்சி செய்யவும். இதனால் உடலில் இருக்கிற கழிவுகள் வியர்வை வழியாக வெளியேறும்.

உடலில் கழுத்துப் பகுதியில்தான் சீக்கிரம் சுருக்கங்கள் விழ ஆரம்பிக்கும். அதனால், கழுத்துக்கான பயிற்சிகளைக் கற்றுக் கொண்டு தினமும் செய்து வந்தால், கழுத்தில் சுருக்கங்கள் வருவது தள்ளிப் போடப்படும்.

வெந்நீரில் எலுமிச்சைச்சாறு, தேன் கலந்து குடிக்கும் போது உடலில் இருக்கிற கழிவுகள் வெளியேறி புத்துணர்ச்சியாக உணர்வீர்கள்.

காலையில் தினமும் உங்கள் சருமத்துக்கு ஏற்ற க்ளென்சிங், டோனிங், மாய்ஸ்ச்சரைஸிங்கை செய்தால் நன்று. இதற்கு நேரமில்லை என்பவர்கள் பாலேட்டால் முகத்துக்கு மசாஜ் செய்யுங்கள். எண்ணெய்ப்பசை சருமம் என்றால், சோற்றுக் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள்.

அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் பாதாம் மிகமிக அவசியம். முதல் நாள் இரவே பாதாம் பருப்பை ஊறவைத்து, காலையில் தோலை உரித்துவிட்டுச் சாப்பிடலாம். ஒருநாளுக்கு 4 அல்லது 5 பாதாம் போதும்.

காலையில் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுவதற்கு முன் உலர்ந்த பழங்கள் அல்லது ஃபிரெஷ் பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். உலர் பழங்கள் ஒரு கைப்பிடியளவு போதுமானது. ஃபிரெஷ்ஷான பழங்கள் என்றால் ஒரு கப் அளவுக்குச் சாப்பிடலாம்.

வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது தவறாமல், உங்கள் சருமத்துக்கு ஏற்ற, காலநிலைக்கு ஏற்ற சன்ஸ்க்ரீனை முகத்தில் அப்ளை செய்யவும்.

தாகம் எடுக்கும்போதெல்லாம் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது ரெண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டு அருந்துங்கள். உடலில் நீர்ச்சத்து போதுமான அளவு இருந்தால்தான் சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் பளபளப்பாக இருக்கும். தவிர, உடலில் இருக்கிற கழிவுகளும் முழுமையாக வெளியேறும்.