அளவுக்கு மிஞ்சினால் தண்ணீரும் நஞ்சாகலாம்… உண்மை சம்பவமும் மருத்துவர் விளக்கமும்!

Share

சமீபத்தில், அமெரிக்காவை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், தனது தாகத்தைத் தணிக்க, 20 நிமிடங்களில் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்தியுள்ளார்; அதன்பின் சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்த சம்பவம் பலரின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீர் எப்படி உயிரைப் பறிக்கும் என்று பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டாலும், அத்தகைய நிலையை ஹைப்போனட்ரெமியா (Hyponatremia)  என்று மருத்துவம் கூறுகிறது. இந்த நிலை ஒருவருக்கு ஏற்பட என்ன காரணம், இதற்கான சிகிச்சை என்ன என்பது பற்றி பொது மருத்துவர் விஷாலிடம் பேசினோம்…

மருத்துவர் விஷால்

தண்ணீரே விஷமாவது எப்படி?

“பொதுவாக வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல், உணவு உட்கொள்ளாமல் விரதமிருப்பது ஆகியவை ஒருவருடைய உடலில் நீரிழப்பை ஏற்படுத்துகிறது. சிலர், சுற்றுலா செல்லும் போது சுகாதாரமற்ற தண்ணீர், பாதுகாப்பான கழிவறைகள் இல்லாமை போன்ற காரணங்களுக்காக அந்த இடங்களில் தண்ணீர் அருந்துவதைத் தவிர்ப்பர். இதுவும் ஒருகட்டத்தில் உடலில் நீரிழப்பை ஏற்படுத்திவிடுகிறது.

ஒருநாளுக்கு 8- 10 கப் தண்ணீர், அதாவது 1.5-2 லிட்டர் தண்ணீரை ஒருவர் அருந்துவது மிகவும் முக்கியமானது. ஒரேயடியாக அதிகளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளக்கூடாது. . சோடியம், பொட்டாசியம் ஆகிய தாதுக்கள் நம் உடலில் இருக்கும். 20 நிமிடங்களில் 2 லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்வது என்பது, ஒருகட்டத்தில் மூளையில் வீக்கத்தை ஏற்படுத்திவிடும். இப்படித்தான் தண்ணீரே விஷமாகிறது. மூளையில் வீக்கம் ஏற்பட்டுவிட்டால் அதை குணமாக்க முடியாது.

ஹைப்போனட்ரெமியா என்றால் என்ன?

ஹைப்போனட்ரெமியா என்பது, உடலில் ஏற்படும் சோடியம் குறைபாடுதான். இது பொதுவாக அனைவருக்கும் காணப்படும். முதியோர், ரத்த அழுத்தம், இதயநோய் தொடர்பான மருந்துகள் எடுப்போருக்கு சோடியம் சிறுநீர் வழியாக வெளியேறும். இதனால் ஹைப்போனட்ரெமியா ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இதுதவிர நீரிழப்பும் ஒரு காரணம் தான்.

தலைசுற்றல்…

வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல், வலிப்பு ஆகியவை ஹைப்போனட்ரெமியாவின் தீவிரத்தைக் குறிக்கும் அறிகுறிகள். ஹைப்போனட்ரெமியாவை பொறுத்தமட்டில் லேசானது, மிதமானது மற்றும் தீவிரமானது என மூன்றாக வகைப்படுத்தலாம்.

தாகத்துக்கு உடனே தண்ணீர் பருகுங்கள், அதே நேரம், அது குறிப்பிட்ட அளவு மட்டுமே இருக்க வேண்டும். அதுபோல தீவிரமான வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது சிறந்தது” என்றார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com