கரூர் மாவட்டம், பாகநத்தம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அறிவியல் ஆசிரியர் பன்னீர்செல்வம் (வயது 46) என்பவர் பணியாற்றி வருகிறார். அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள பாடத்தினை இருபால் மாணவர்கள் பயிலும் வகுப்பறையில் மிகவும் ஆபாசமாக கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி மாணவர்களின் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் பாடம் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
Also Read: ஆசை ஆசையாக இளம்பெண் வாங்கிய ஸ்கூட்டி நம்பர் ப்ளேட்டில் SEX… வண்டியே வேணாம் என முடிவு
இது குறித்து மாணவர்கள் எழுத்துபூர்வமாக அளித்த புகார் அடிப்படையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் உத்தரவின் பேரில் கரூர் மாவட்ட கல்வி அலுவலர் விஜயேந்திரன் மற்றும் தாந்தோணி வட்டார கல்வி அலுவலர் ரமணி ஆகியோர் பள்ளியில் நேரடியாக சென்று பள்ளி மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். மாணவர்களிடம் பாலியல் உணர்வைத் தூண்டும் வகையில் குறிப்பிட்ட பாடத்தை நடத்துவதற்காக சில பாடங்களை தவிர்த்துவிட்டு வகுப்பறையில் பாடம் நடத்தியது தெரியவந்தது.
மேலும், மாணவர்களுக்கு பாலியல் சம்பந்தமான கேள்விகளை தேர்வாக வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதன் அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு சமர்பித்தனர். விசாரணைக்குழு அளித்த அறிக்கையின்படி மாவட்ட கல்வி அலுவலர் விஜயேந்திரன் சம்பந்தப்பட்ட அறிவியல் ஆசிரியர் பன்னீர்செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Also Read: அரியலூர் பாஜக தலைவர் கைது… தற்கொலை படை தாக்குதல் நடத்துவோம் என்றதால் சர்ச்சை
கடந்த மாதம் கரூர் தனியார் பள்ளி மாணவி பாலியல் சீண்டலில் பலியாகும் கடைசி மாணவியாக நானே தான் இருக்கவேண்டும். இனி வேர யாரும் அந்த துன்பத்திற்காக ஆளாகக்கூடாது என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கரூரில் பரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆபாசமாக பாடம் நடத்திய பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
செய்தியாளர்: தி.கார்த்திகேயன் (கரூர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.