அரை மூடி தேங்காய் இருக்கா..? அப்போ குழந்தைகளுக்கு பிடித்த தேங்காய் ஐஸ்கிரீம் செய்யலாம்!

Share

ஐஸ்கிரீம் என்றாலே நம்மில் பலருக்கு நாவில் எச்சில் ஊறும். ஏனென்றால், இதை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. கோடை காலமோ.. மழைக்காலமோ… ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு மட்டும் நாம் நேரம் காலம் பார்ப்பதில்லை.

கொளுத்தும் வெயிலுக்கு ஜில்லென ஐஸ்கிரீம் சாப்பிட்டா எப்படி இருக்கும். வாருங்கள் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் தேங்காய் வைத்து கோகனட் ஐஸ்கிரீம் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தேங்காய் பால் – 4 கப்.

தேங்காய் பத்தை – 1 கப்.

சர்க்கரை – 1 கப்.

சோள மாவு – 4 ஸ்பூன்.

பிரெஷ் கிரீம் – 1 கப்.

செய்முறை :

முதலில் கோகனட் ஐஸ்கிரீம் செய்ய, ஒரு தேங்காயை உரித்து, உடைத்து தேங்காய் பத்தையை மட்டும் தனியாக எடுத்து, அதை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

இப்போது ஒரு பெரிய பாத்திரத்தில், நறுக்கிய தேங்காய், சோள மாவு மற்றும் 1/2 கப் குளிர்ந்த தேங்காய்ப் பால் சேர்த்து நன்கு கலக்கவும்.

இதையடுத்து, ஒரு ஆழமான பாத்திரத்தை மிதமான தீயில் வைத்து, அதில் மீதமுள்ள பாலை சேர்த்து கொதிக்க வைக்கவும். இப்போது அதில் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை முழுவதுமாக கரையும் வரை நன்றாக கிளறவும். பின்னர் இதை 4-5 நிமிடங்கள் கிண்டியபடி கொதிக்க வைக்கவும்.

இப்போது, தேங்காய் பால் மற்றும் சோள மாவு கலவையை பாலுடன் சேர்த்து மீண்டும் நன்றக கலக்கவும். பால் நன்றாக வற்றியதும், அடுப்பை அனைத்து சேர்மத்தை குளிர்விக்கவும்.

Also Read | குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கொத்தமல்லி வடை செய்வது எப்படி?

சேர்மம் நன்றாக ஆறியதும் அதில் பிரெஷ் கிரீம் சேர்க்கவும். ஒரு அலுமினிய பாத்திரத்தை எடுத்து அதில் சேர்மத்தை ஊற்றவும். இப்போது, இந்த பாத்திரத்தை அலுமினிய ஃபாயில் ஷீட் அல்லது க்ளிங் ஷீட் மூலம் மூடி, ஃப்ரீசரில் வைக்கவும்.

இந்த கலவையை சுமார் 6-7 மணி நேரம் அப்படியே விட்டுவிடவும். இந்த கலவையை எடுத்து பிளெண்டர் ஜாடிக்குள் மாற்றி, மென்மையான வடிவம் கிடைக்கும் வரை நன்றாக பிலேண்ட் செய்யவும்.

பின்னர் இந்த கலவையை மீண்டும் அலுமினிய பாத்திரத்தில் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய தேங்காய் சில்லுகளை சேர்த்து அலுமினிய ஃபாயில் ஷீட்டால் மூடி, கலவை செட் ஆகும் வரை உறைய வைக்கவும். 5 முதல் 6 மணி நேரம் கழித்து எடுத்தால் கோகனட் ஐஸ்கிரீம் தயார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com