அரை இறுதியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி | India women look to continue winning streak in Asian Champions Trophy,

Share

Last Updated : 17 Nov, 2024 03:02 AM

Published : 17 Nov 2024 03:02 AM
Last Updated : 17 Nov 2024 03:02 AM

ராஜ்கிர்: மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் பிஹார் மாநிலம் ராஜ்கிர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது 4-வது லீக் ஆட்டத்தில், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் சென்ற சீனாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் சங்கீதா குமாரி 32-வது நிமிடத்திலும், சலீமா 37-வது நிமிடத்திலும் பீல்டு கோல் அடித்தனர். 60-வது நிமிடத்தில் தீபிகா, பெனால்டி கார்னரில் கோல் அடித்தார். இந்திய அணிக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் இந்திய அணி 8 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு முன்னேறியது.

FOLLOW US

தவறவிடாதீர்!


நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com