அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய-சீன வீரர்கள் மோதல் – பலர் படுகாயம் – என்ன நடந்தது?

Share

இந்தியா, சீனா மோதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோப்புப்படம்

இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் செக்டாரில் இந்திய – சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. 2022ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி இந்த மோதல் நடந்ததாக இந்திய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 9ஆம் தேதி அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டரில் சீன ராணுவ துருப்புக்கள் நுழைந்ததாகவும், அதற்கு இந்தியா பதிலடி கொடுத்ததாகவும் இந்திய இராணுவம் பிபிசியிடம் தெரிவித்தது.

இந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்கள் காயமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து, இரு நாட்டு வீரர்களும் உடனடியாக அங்கிருந்து பின்வாங்கி விட்டதாக இந்திய ராணுவம் கூறுகிறது.

இந்த மோதலுக்குப் பிறகு பரஸ்பரம் அமைதியை நிலைநாட்ட அப்பகுதியின் தளபதி சீனாவில் உள்ள எல்லை கட்டளை அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிய வந்துள்ளது.

அருணாச்சல பிரதேசத்தின் தவாங்கில் நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்களை விட சீன ராணுவ வீரர்கள் அதிக அளவில் காயம் அடைந்ததாக இந்திய பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்தியாவின் முக்கிய ஆங்கில நாளிதழான தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மோதி அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்

இந்த விவகாரம் தொடர்பான தகவல் வெளியே வரத் தொடங்கிய பிறகு மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அரசை இலக்கு வைத்து காங்கிரஸ் கட்சி விமர்சித்திருக்கிறது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com