அருணாச்சலில் ஒரே ஜேடியு எம்எல்ஏ பாஜ.வில் ஐக்கியம்

Share

இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 15 இடங்களில் போட்டியிட்டு 7 இடங்களில் வென்றது. 41 இடங்களில் வென்ற பாஜவுக்கு அடுத்து 2வது பெரிய கட்சியாக இருந்தது. ஆனால், கடந்த 2020ம் ஆண்டு ஐக்கிய ஜனதா தளத்தின் 6 எம்எல்ஏக்கள் கூண்டோடு பாஜவுக்கு தாவினர். இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளத்திற்கு எஞ்சியிருந்த ஒரே எம்எல்ஏ டெசி கசோவும் நேற்று பாஜவில் இணைந்தார். இதன் மூலம் 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பாஜவின் பலம் 49 ஆக அதிகரித்துள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com