அரிதான ஆசனவாய் புற்றுநோய் பாதித்த பெண் சிகிச்சை முடிந்து 6 ஆண்டுக்கு பிறகு எப்படி இருக்கிறார்?

Share

ஆசனவாய் புற்றுநோய், மருத்துவம்

பட மூலாதாரம், Trish Prosser

படக்குறிப்பு, சிகிச்சையின் காரணமாக தனது பிறப்புறுப்பின் சுவர்கள் மூடிக்கொண்டதாக திரிஷ் கூறினார்.

ஆசனவாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், கதிரியக்க சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட தாங்க முடியாத வலியால், தான் இறந்து போய்விடுவோம் என நினைத்ததாக கூறுகிறார்.

57 வயதான திரிஷ் ப்ரோசெரின் தன்னுடைய பெண்ணுறுப்பின் உட்புறச் சுவர்கள் மூடிவிட்டதாகவும் ஆறு ஆண்டுகள் கழித்தும் தான் இன்னும் வலியுடன் போராடிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

நான்கு குழந்தைகளின் தாயான அவர், தனக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோயின் வகை குறித்து தன்னுடைய அன்புக்குரியவர்களிடம் கூறுவதற்கு சங்கடப்படுவதாகவும் ஆசனவாய் புற்றுநோயை சுற்றி சமூக ரீதியாக தவறான புரிதல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆசனவாய் புற்றுநோய் அரிதானது, பிரிட்டனில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1,500 பேர் இதனால் பாதிக்கப்படுகின்றனர், இதில் கிட்டத்தட்ட 40-50 பேர் வட அயர்லாந்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

ஆசனவாய் புற்றுநோய், மருத்துவம்

பட மூலாதாரம், Trish Prosser

படக்குறிப்பு, கோவிட் பெருந்தொற்று உச்சத்தில் இருந்த 2020-ஆம் ஆண்டில் திரிஷுக்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

“உடலின் கீழ்ப்புற பாகங்களில் உள்ள விஷயங்கள் குறித்து பேசுவதற்கு பலரும் சங்கடப்படுகின்றனர். அவை சங்கடமாகவோ அல்லது பேசுவதற்கு சமூக கட்டுப்பாடு கொண்ட விஷயங்களாகவோ இருக்கலாம், ஆனால் அந்த சமூக கட்டுப்பாட்டை உடைக்க உதவ வேண்டும் என விரும்புகிறேன்,” திரிஷ் கூறுகிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com