ஆவின் மேலாளர் பணிக்கு…
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் சபாநாயகரின் சகோதரர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள்,
“விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 49), எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் தாயில்பட்டி, அதிமுக கட்சியை சேர்ந்தவருமான மாரியப்பனுக்கும் தொழில் ரீதியாக பழக்கம் ஏற்பட்டது. அதன்பேரில், ரவீந்திரனின் எலக்ட்ரிக்கல் கடைக்கு மாரியப்பன் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அந்தசமயம் ரவீந்திரனின் சகோதரி படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் அவரைப் பற்றி விசாரித்த மாரியப்பன், ஆவின் மேலாளர் காலிப்பணியிடம் உள்ளது. பணம் கொடுத்தால் செல்வாக்கை பயன்படுத்தி அரசுவேலை வாங்கிவிட முடியும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய ரவீந்திரனும் பணத்தை கொடுத்து ஆவினில் வேலை வாங்கிவிடவேண்டும் என்ற எண்ணத்தில், மாரியப்பனுடன் சேர்ந்து வெம்பக்கோட்டை அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்த ராமுதேவன்பட்டியை சேர்ந்த விஜயநல்லதம்பியை சென்று சந்தித்துள்ளனர்.