அரசியல் ஆண்மை உள்ள யாராயினும் பொதுச்செயலாளருக்கு போட்டியிடலாம்: திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

Share

திண்டுக்கல்: அரசியல் ஆண்மை உள்ளவர்கள் யாராக இருந்தாலும், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடலாமென திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது :
அதிமுகவில் மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க முடியாது. தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க முடியும் என எம்ஜிஆர் சட்ட திருத்தம் செய்திருந்தார். அதேபோல் தான் தற்போது உள்ள இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்ட திருத்தம் செய்துள்ளார். இன்னும் 4 மாதத்தில் நாமெல்லாம் ஓட்டு போட்டு பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதுதான் அரசியல் ஆண்மை. அல்லது பன்னீர்செல்வம் போல் ஒளிந்து கொண்டு இருப்பது அரசியல் ஆண்மையா..?
அரசியல் ஆண்மை உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் பொதுச் செயலாளருக்கு போட்டியிடலாம். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சினிமாவில் பிரபலமாகி மக்களால் அறிமுகம் ஆனார்கள்.
அவர்களுக்கு தொண்டர்கள் ஆதரவு இருந்ததால் அந்த சட்டம் இயற்றினார்கள். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் என பன்னீர்செல்வம் கூறி வருகிறார். கண்டிப்பாக தர்மம் வெல்லும் அது எடப்பாடி பழனிசாமி மூலம் நடக்கும். ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் குழம்பி போய் நிற்பவர்கள் வேண்டும் என்றால் தனிக்கட்சி ஆரம்பிக்கலாம். ஏனென்றால் நிறைய லெட்டர் பேடு கட்சிகள் தமிழகத்தில் உள்ளன. இவ்வாறு பேசினார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com