அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் விளக்கம்: “நான் பேசியதாக பகிரப்படும் ஆடியோ ‘போலி’, மெளனம் காக்க இதுதான் காரணம்”

Share

பிடிஆர் தியாகராஜன்
படக்குறிப்பு,

பிடிஆர் தியாகராஜன், தமிழ்நாடு நிதியமைச்சர்

அடையாளம் தெரியாத நபருடன் தான் பேசியது போல சமூக ஊடகங்களில் வைரலான ஆடியோ ‘போலி’ என்று தெரிவித்திருக்கிறார் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன்.

சில தினங்களுக்கு முன்பு பிடிஆர் தியாகராஜன் ஒருவருடன் செல்பேசியில் பேசுவதாகக் கூறி பகிரப்பட்ட ஆடியோவில், “உதயநிதியும், சபரீசனும் கடந்த 60 ஆண்டுகளில் அவர்களின் தாத்தாக்கள் சம்பாதித்தை விட, இந்த ஒரு வருடத்தில் அதிகமாக சம்பாதித்து விட்டார்கள். ஏறத்தாழ 30 ஆயிரம் கோடி வரை சம்பாதித்துள்ளார்கள். இப்போது அதனை மறைக்க முடியாமல் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்கள்,” என்றவாறு ஒருவர் பேசுகிறார்.

அந்த ஆடியோவில் பேசியவர் தமிழ்நாடு நிதியமைச்சர் தியாகராஜன் தான் என்று சவுக்கு இணையதள ஆசிரியரும் லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் ஊழியருமான சங்கர் தெரிவித்திருந்தார். அந்த ஆடியோவை வெளியிட்டது தாம் தான் என்றும் இதுபோல மேலும் சில ஆடியோக்களை விரைவில் வெளியிடப்போவதாகவும் சங்கர் கூறியிருந்தார்.

இந்த ஆடியோவின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படாத நிலையில், தமிழ்நாடு அரசியல் களத்தில் இந்த ஆடியோ விவகாரம் சர்ச்சையானது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com