அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் விட்டுச் சென்ற ஆயுதங்களை தாலிபன் என்ன செய்தது?

Share

ஆப்கானிய போராளிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தாலிபனுக்கு எதிராக ஆப்கானிய பாதுகாப்புப் படைகளுக்கு ஆதரவளிக்க ஹெராட்டில் ஆயுதங்களுடன் நிற்கும் ஆப்கானிய போராளிகள்.

  • எழுதியவர், யாசின் ரசூலி மற்றும் ஜியா ஷஹ்ரியார்
  • பதவி, பிபிசி ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் இருந்து ஐந்து லட்சம் ஆயுதங்கள் காணாமல் போயுள்ளன. அவை விற்கப்பட்டிருக்கலாம் அல்லது கடத்தப்பட்டிருக்கலாம் என பிபிசியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த ஆயுதங்களில் சில அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களின் கைகளுக்கும் சென்றுவிட்டன என்று ஐக்கிய நாடுகள் சபை நம்புகிறது.

2021 ஆம் ஆண்டில் தாலிபன் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய போது, ​​சுமார் 10 லட்சம் ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் இருந்ததைக் கண்டுபிடித்ததாக பெயர் வெளியிட விரும்பாத ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இவற்றில் பெரும்பாலானவை அமெரிக்காவின் நிதி உதவியுடன் வாங்கப்பட்டவை. அவற்றில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எம்4 மற்றும் எம்16 ரக துப்பாக்கிகளும் அடங்கும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com