தக்காளித் தொக்கு
தேவையான பொருட்கள்
பழுத்த தக்காளி – 1/2 கிலோ
புளி – சிறிய எலுமிச்சை அளவு
மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
காஷ்மீர் மிளகாய்த்தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
வறுத்து பொடித்த வெந்தயப்பொடி – 1/2 டீஸ்பூன்
வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
கடுகு உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
நல்லெண்ணெய் – 1/4 கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
ஸ்டெப் 1
தக்காளியை கழுவிய பின் தண்ணீர் இல்லாமல் துடைத்த பின்பு நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். புளியை சூடான நீரில் ஊறவைத்து 1/2 கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.
ஸ்டெப் 2
கனமான கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுந்து சேர்த்து வெடித்ததும் நறுக்கிய தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.