அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ் – டொனால்ட் டிரம்ப் இருவரில் முந்துவது யார்? நேரலை

Share

அமெரிக்க அதிபர் தேர்தல் - கமலா ஹாரிஸ் - டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை 12 மாகாணங்களுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், ஒக்லஹோமா, மிசௌரி, இண்டியானா, கென்டக்கி, டென்னஸ்ஸி, அலபாமா, ஃபுளோரிடா, மேற்கு விரிஜினியா ஆகிய மாகாணங்களில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவர் இதுவரை 90 தேர்வாளர் குழு (எலக்ட்டோரல் காலேஜ்)வாக்குகளைப் பெற்றுள்ளார்.

கமலா ஹாரிஸைப் பொருத்தவரை, வெர்மான்ட், நியூ ஹாம்ப்ஷயர், மசாசூசெட்ஸ், மேரிலேன்ட், டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா ஆகியவற்றை வசப்படுத்தியுள்ள அவர் 27 தேர்வாளர் குழு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 538 தேர்வாளர் குழு வாக்குகளில் யார் 270 அல்லது அதற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றி பெறுவார்.

இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகின்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com