அமெரிக்கா, ஜெர்மனியில் மாறும் நிலைமை: 2025-ஆம் ஆண்டில் மக்களின் புலப்பெயர்வு எப்படி இருக்கும்?

Share

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், குடியேற்ற கொள்கைகளில் மாற்றம்

பட மூலாதாரம், Getty Images

உலகில் ஆண்டு முழுவதும் மக்கள் புலம் பெயர்ந்து கொண்டே இருக்கின்றனர். எதிர்காலத்தில் அது குறைவதற்கான எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை.

கடந்த பத்தாண்டுகளாக புலம் பெயர விரும்பும் மக்களுக்கு பல தடைகள் நிலவுகின்றன. அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய முதல் ஆட்சியின் போது “சுவரை எழுப்புவோம்,” என்று குரல் கொடுத்தார். பிறகு கொரோனா பெருந்தொற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தடைகளும், பிரெக்ஸிட்டும் அமெரிக்கா – பிரிட்டன் இடையே மக்களின் சுதந்திரமான இயக்கத்திற்கு முடிவு கட்டின.

புலம் பெயரும் மக்களின் இலக்குகளாக உள்ள அமெரிக்கா மற்றும் ஜெர்மனியில் ஏற்பட இருக்கும் முக்கிய அரசியல் மாற்றங்களோடு 2025-ஆம் ஆண்டு ஆரம்பமாக உள்ளது. அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வர உள்ளார்.

பிப்ரவரியின் கடைசியில் ஜெர்மனியில் தேர்தல் நடைபெற உள்ளது. கடுமையான புலம்பெயர் கொள்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் அரசியல் கட்சியினர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com