அமெரிக்கா–இரான் பதற்றத்தில் இஸ்ரேலின் கணக்கீடு என்ன? நெதன்யாகு மௌனத்தின் பின்னணி

Share

ஒரு எச்சரிக்கும் பேனரின் பின்னணியில் நிற்கும் ஒரு பெண்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, அமெரிக்கா நடத்தும் எந்தவொரு தாக்குதலுக்கும் ‘உடனடி மற்றும் முன்னெப்போதும் இல்லாத’ வகையிலான பதிலடி கொடுக்கப்படும் என்று இரானிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவம் குவிக்கப்பட்டிருப்பது தொடர்பான உலகளாவிய ஊகங்களுக்கிடையே, இஸ்ரேல் தலைவர்கள் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்து வருகின்றனர்.

இம்மாதம் இரானின் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவாக கூறிய சில கருத்துகளைத் தவிர, தனது மிகப்பெரிய எதிரிக்கு எதிராக, தனது வல்லரசு நட்பு நாடு நடவடிக்கை எடுப்பது குறித்து இஸ்ரேல் பிரதமர் பகிரங்கமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அவரது அரசாங்கமும் சமமாக மௌனமாக உள்ளது.

“இந்த தருணத்திற்கு நெதன்யாகு அளிக்கும் முக்கியத்துவத்தை இது காட்டுகிறது,” என்று இஸ்ரேலின் பாதுகாப்பு உளவுத்துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றியவரும் தற்போது இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆய்வு நிறுவனத்தில் மூத்த இரான் ஆராய்ச்சியாளராகவும் உள்ள டேனி சிட்ரினோவிச் கூறினார்.

“அமெரிக்கா வளைகுடாப் பகுதியில் இவ்வளவு படைகளைக் கொண்டிருப்பதும், இரானைத் தாக்குவதற்கு டிரம்ப் இவ்வளவு நெருக்கமாக இருப்பதும், நெதன்யாகுவைப் பொறுத்தவரை, அவர் இழக்க முடியாத ஒரு பொன்னான தருணம்.” என்கிறார் சிட்ரினோவிச்.

இஸ்ரேலின் சிக்னல் உளவுப் பிரிவின் முன்னாள் துணை இயக்குநரான ஆசாஃப் கோஹன், இஸ்ரேலின் மௌனத்திலும் ஒரு உத்தி இருப்பதாகக் கூறுகிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com