அமெரிக்காவில் மோதிக்கு ஜோ பைடன் அதிக முக்கியத்துவம் தருவது ஏன்? – அமெரிக்க ஊடகங்களின் அலசல்

Share

மோதியின் அமெரிக்கப் பயணம்

பட மூலாதாரம், Getty Images

இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் அமெரிக்கப் பயணம் உலகம் முழுவதும் சர்வதேச ஊடகங்களில் பெரிய அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

குறிப்பாக, அமெரிக்க ஊடகங்களில் மோதியின் பயணம் சிறப்புக் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்க அரசின் விருந்தினராக மோதி அமெரிக்காவுக்கு செல்வது இதுவே முதல் முறை.

வியாழக்கிழமையன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோதி உரையாற்றியுள்ளார். இந்தியப் பிரதமர் என்ற வகையில் இரண்டாவது முறையாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றியுள்ளார். இவ்வாறு அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2 முறை உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோதி பெற்றுள்ளார்.

பிரதமர் மோதியின் வருகை குறித்து அமெரிக்க ஊடகங்களின் பார்வை கலவையானதாக இருக்கிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோதியின் உரையை அந்நாட்டு எம்.பி.க்கள் பலரும் புறக்கணித்த செய்திக்கு அந்நாட்டு ஊடகங்கள் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்துள்ளன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com