அமெரிக்காவில் கைவிடப்பட்ட கண்டெய்னர் லாரியில் 46 சடலங்கள்: என்ன நடந்தது?

Share

அமெரிக்காவில் கைவிடப்பட்ட லாரியில் 46 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

அமெரிக்காவில் கைவிடப்பட்ட லாரியில் 46 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன

அமெரிக்காவிலுள்ள டெக்சாஸின் சான் அன்டோனியோவின் புறநகரில் கைவிடப்பட்ட நிலையில் நின்றிருந்த கண்டெய்னர் லாரியில் இடம்பெயர்ந்து குடியேறியவர்கள் என்று நம்பப்படும் சுமார் 46 பேர் இறந்து கிடந்தனர்.

நான்கு குழந்தைகள் உட்பட 16 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உயிர் பிழைத்தவர்கள், “தொடுவதற்கே சூடான நிலையில்” இருந்தனர். வெப்ப அதிர்ச்சி (Heat Stroke) மற்றும் வெப்ப சோர்வு ஆகியவற்றால் அவதிப்பட்டனர்.

அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் இருந்து 250கி.மீ தொலைவிலுள்ள சான் அன்டோனியோ, ஆட்கடத்தல்காரர்களுக்கான முக்கியமான போக்குவரத்துப் பாதை.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com