அமிர்தப்பழம், மாங்காய் அடை, பீட்ரூட் அடை, கறுப்பு உளுந்து அடை | வகை வகையான வீக் எண்டு ரெசிப்பீஸ்! | variety adai – week end special

Share

தேவையானவை:

பச்சரிசி – 250 கிராம்

தேங்காய் – அரை மூடி (துருவவும்)

கறுப்பு உளுந்து – 60 கிராம்

காய்ந்த மிளகாய் – 3

சீரகம் – அரை டீஸ்பூன்

மிளகு – அரை டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

இஞ்சி – அரை இன்ச் துண்டு (தோல் சீவவும்)

பச்சை மிளகாய் – 2

கறிவேப்பிலை – ஓர் ஆர்க்கு

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

கறுப்பு உளுந்து அடை

கறுப்பு உளுந்து அடை

செய்முறை:

அரிசியையும் கறுப்பு உளுந்தையும் ஒன்றாகக் கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். கிரைண்டரில் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பிறகு கழுவிய அரிசி – உளுந்து சேர்த்து கொரகொரப்பாக அரைத்து‌, பிறகு அதில் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் அரைத்தெடுக்கவும்.

இதை எட்டு மணி நேரம் புளிக்கவிடவும். பிறகு அடை மாவில் சிறு துண்டுகளாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும். நன்றாகக் கலக்கிக்கொள்ளவும் (தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்).

தோசைக்கல்லை அடுப்பில் காயவைத்து மாவைச் சற்று கனமாகவும், அதேவேளையில் சிறிதாகவும் தோசையாக வார்த்து, எண்ணெய்விட்டு மூடிவைத்து சுடவும்.

இந்த அடைக்கு, பச்சை மிளகாய்ச் சட்னி தொட்டுக்கொண்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com