அமித் ஷா – இபிஎஸ் சந்திப்பு மூலம் கூட்டணி உறவை தக்க வைக்கிறதா அதிமுக? டெல்லியில் என்ன நடந்தது?

Share

எடப்பாடி பழனிசாமி அமித் ஷா

டெல்லியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டாவையும் சந்தித்துப் பேசியிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியின் தலைமையை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது மற்றும் அவரது தலைமைக்கு சாதகமா நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பிறகு டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் மேலிட தலைவர்களை எடப்பாடி பழனிசாமி சந்திப்பது இதுவே முதல் முறை. அதிலும், இந்த தலைவர்களை தனியாக சந்திக்காமல் தமது தீவிர ஆதரவாளர்களான அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சி.வி. சண்முகம் ஆகியோருடன் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது.

அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பொதுக்குழுவால் நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தொடர்ந்து தன்னையே அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று அறிவித்து போட்டி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக கடந்த மார்ச் மாதம் தேர்வு செய்யப்பட்ட பிறகு திருச்சியில் தமது ஆதரவாளர்களின் பலத்தை காட்டும் நோக்கத்துடன் ஓ.பன்னீர்செல்வம் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தினார். இத்தகைய சூழலில் டெல்லிக்கு சென்று அமித் ஷா, ஜே.பி. நட்டாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசியிருப்பது தமிழக பாஜக அளவிலும் உற்று நோக்கப்படுகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com