அமமுகவின் பொதுக்குழு ஆகஸ்ட் 15ம் தேதி நடக்க உள்ளதாக டிடிவி தினகரன் அறிவிப்பு

Share

சென்னை: அமமுகவின் பொதுக்குழு ஆகஸ்ட் 15ம் தேதி நடக்க உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

ஜெயலலிதா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளை தொடர்ந்து நிலைநாட்டிட போராடி வரும் நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்பழகன் அவர்களின் தலைமையில் வரும் 15.08.2022 திங்கள்கிழமை அன்று காலை 9 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com