அபூர்வ மரபு நோய் பாதித்த சிறுவனின் வங்கிகணக்கில் ரூ.11.6 கோடி அனுப்பிய பெயர் வெளியிட விரும்பாத நபர்! | Help for a boy with rare disease – an anonymous person sent Rs.11.6 crore

Share

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் நெடும்பாச்சேரி மேய்க்காடு பகுதியை சேர்ந்தவர் சாரங்க். வணிகக் கப்பலில் பணி புரிந்து வருகிறார். இவரின் மனைவி அதிதி. இவர்களின் மகன் நிர்வாணுக்கு ஒன்றரை வயது ஆகிறது. பிறந்து 13 மாதங்கள் ஆன பிறகும் நிர்வாணுக்கு நிற்கவோ, எழுந்து அமரவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்துகடந்த ஜனவரி மாதம், மருத்துவர்கள் மூன்று வாரம் பரிசோதனை நடத்தியதை தொடர்ந்து நிர்வாணுக்கு ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி (Spinal Muscular Atrophy – SMA) ) என்ற அரிய வகை மரபணு நோய் பாதித்துள்ளதாகக் கடந்த மாதம் கண்டறியப்பட்டது. இரண்டு வயது நிறைவடைவதற்கு முன்பு அதற்கான சிகிச்சை அளிக்காமல் இருந்தால் சிறுவனை காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் இருந்து 17.3 கோடி ரூபாய் மதிப்புள்ள சோல்ஜென்ஸ்மா(Zolgensma) என்ற மருந்தை வரவழைத்து நிர்வாணுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தன் மகன் நிர்வாணுடன் சாரங்க்

தன் மகன் நிர்வாணுடன் சாரங்க்

இதையடுத்து சாரங்க் – அதிதி தம்பதி தங்கள் மகன் சிகிச்சைக்கு உதவி கேட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். கிரௌடு ஃபண்டிங் ஆப் மூலம் மகனின் சிகிச்சைக்காக உதவுபவர்கள் பணம் அனுப்ப ஒரு வங்கிக் கணக்கு எண்ணும் வெளியிட்டனர். இதுகுறித்து மீடியாக்களும் செய்தி வெளியிட்டன. நிர்வாணின் சிகிச்சைக்காக சில கோடி ரூபாய் வங்கிக் கணக்கில் சேர்ந்துள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com