அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வி சென்றடைய ஒன்றிய அரசு ரூ6,664 கோடி ஒதுக்கியுள்ளது: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை

Share

சென்னை: அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வி சென்றடைய ஒன்றிய அரசு கடந்த 4 ஆண்டுகளில் ரூ6,664 கோடியை ஒதுக்கியுள்ளது என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசும்போது தமிழகத்தின் கல்வி மேம்பாட்டிற்கு பிரதமர் மோடி உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமிழகத்தின் கல்வி தரத்தை உயர்த்தவும், அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வி சென்றடையவும் சமகிர சிக்‌ஷா நிதி மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ6,664 கோடியை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.

2015ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை தமிழகத்தில் 3,96,942 மாணவர்களுக்கு பிஎம்கேவிஓய் திட்டத்தின் மூலமாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை, எண்ணிக்கையில் மட்டுமே கவனம் செலுத்தாமல் தரத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை தமிழக அரசை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com