பெண்கள், கணவரிடம் நியூட் செக்ஸுக்கு நோ சொல்வது காலங்காலமாக நடந்துகொண்டே இருக்கிறது. இதுபோன்ற ஒரு கேஸ் ஹிஸ்டரியைத்தான் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் இன்றைக்கு நம்முடன் பகிர்ந்துகொள்ளவிருக்கிறார்.
”அவர்கள் புதிதாகத் திருமணமான இளம் தம்பதி. இருவருமே சென்னையில் பிறந்து வளர்ந்தவர்கள். நன்கு படித்து கைநிறைய சம்பாதிக்கும் வேலையில் இருக்கிறார்கள். இருவரும் காதலித்துக் கைப்பிடித்தவர்களும்கூட. ‘செக்ஸ் லைஃப்ல திருப்தியில்ல…’ என்கிற பிரச்னையுடன் என்னைச் சந்திக்க வந்திருந்தார்கள். முதலில் கணவரிடம் பேசினேன்.

‘ரொம்ப ஆசை ஆசையா லவ் பண்ணி கல்யாணம் செஞ்சோம் டாக்டர். ஆனா, செக்ஸ்ல திருப்தியே இல்ல. எப்படி எப்படியோ இருக்கணும்னு ஆசைப்பட்டேன். என் வொய்ஃப் எதுக்குமே ஒத்துக்க மாட்டேங்குறா’ என்றார். அதாவது, மனைவி நியூட் செக்ஸுக்கு ஒத்துக்க மாட்டேங்குறார் என்பதுதான் அவரோட பிரச்னை.
அடுத்து மனைவியிடம் பேசினேன். ‘லவ் பண்ணும்போதே இவர் செக்ஸ் பத்தி நிறைய பேசுவாரு டாக்டர். எல்லாம் கல்யாணத்துக்குப் பிறகுதான்னு கன்ட்ரோல் பண்ணி வெச்சிருந்தேன். கல்யாணத்துக்குப் பிறகு இவரை சமாளிக்கவே முடியலை. இது ஒரு பக்கமிருக்க, இன்னொரு பக்கம் என்னோட ஃப்ரெண்ட்ஸ் ‘நியூட் செக்ஸ் வெச்சுக்கிட்டின்னா அவருக்கு உன் மேல சீக்கிரமே கிக் போயிடும்’னு சொல்லி பயமுறுத்திட்டாங்க. செக்ஸ்ல ரொம்ப ஆர்வமா இருக்கிற என் ஹஸ்பெண்டுக்கு நான் சீக்கிரமே சலிச்சுப் போயிட்டா, அவர் வேற அஃபையர் ஏதாவது வெச்சிப்பாரோன்னு பயமா இருக்கு’ என்றார்.
பெண்களுக்கு, செக்ஸ்ல தோழிகள் சொல்றது, தெரிஞ்சவங்க சொல்றதுனு நிறைய குழப்பங்கள் இருக்கு. அதெல்லாம் அவர்களோட கருத்துகள் மட்டுமே… அதையெல்லாம் பெட்ரூமுக்கு வெளியே வெச்சிட்டு, பெட்ரூமுக்கு உள்ளே உங்களுக்கும், உங்க கணவருக்கும் பிடிச்ச மாதிரி வாழுங்க. அதுதான் உங்க தாம்பத்ய வாழ்க்கையோட ஆயுளைக் கூட்டும்.
அந்தப் பெண்ணுக்கும் இந்த ஆலோசனையைச் சொல்லி அனுப்பி வைத்தேன். கூடவே கணவரிடமும், ‘என்னதான் லவ் மேரேஜ்னாலும், இது கல்யாணமான புதுசுதான். அவங்க பயப்படுற அளவுக்கு செக்ஸ்ல வேகமா ஈடுபடாதீங்க. நிதானமா, ரொம்ப நேரம் தாம்பத்ய உறவு வெச்சுக்கிற ஆண்களைத்தான் பெண்களுக்கு அதிகம் பிடிக்கிறது. நீங்களும் இதை ஃபாலோ செய்யுங்க’ என்று ஆலோசனை சொல்லி அனுப்பினேன்.”