“அதுதான் அவரின் வழக்கமான ஆக்ஷன்” – உஸ்மான் டரிக் பந்துவீச்சு குறித்து அஷ்வின் | That is his regular action” – Ashwin on Usman Tariq’s bowling action.

Share

கொழும்புவில் நடைபெற்ற அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில், உஸ்மான் டரிக் பந்துவீசிய விதம், தற்போது பேசுப்பொருளாக மாறியிருக்கிறது.

பேசுப்பொருளான உஸ்மான் டரிக் பந்துவீச்சு

உஸ்மான் டரிக், பந்துவீச வரும்போது, பந்தை ரிலீஸ் செய்வதற்கு முன், இரண்டு நொடிகள் வரை நின்றுவிட்டு பிறகு பந்துவீசுவார்.

மேலும், அவரது கை ஆக்‌ஷன், மற்ற பௌலர்களைப் போல இல்லாமல், சற்று வித்தியாசமாக இருக்கும். கேதர் ஜாதவைப் போல பந்துவீசுவார். ஆனால், அப்படி பந்துவீசும்போது, உஸ்மான் டரிக்கின் கை, நேராக இல்லாமல், சற்று வளைந்து திரும்பி இருக்கும்.

உஸ்மான் டரிக்

உஸ்மான் டரிக்

ஐசிசி விதிமுறைப்படி, பந்துவீசும் கை 15 டிகிரிவரை வளைந்திருக்கலாம். ஆனால், உஸ்மானின் கை அதற்கும் மேல் வளைந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

உஸ்மான் டரிக் விளக்கம்

இந்தக் குற்றச்சாட்டுக்கு உஸ்மான் டரிக் விளக்கமும் அளித்திருக்கிறார். அதாவது, ” எனது கை, இயற்கையாகவே வளைந்திருக்கிறது. எனது கையை நேராக நீட்ட முடியாது. இதனை ஐசிசியும் சோதித்து பார்த்துவிட்டது. இது எனது உடம்பில் இருக்கும் மாற்றம். இதனை மாற்ற முடியாது’’ என்று கூறியிருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com