அதிர்ச்சியளித்த பவன்; நம்பிக்கையூட்டிய நரேந்தர்; `டை’ யைத் தவிர்க்க முடியாத தமிழ் தலைவாஸ்! | Tamil Thalaivas started their Pro Kabaddi Season 9 Campaign with a ‘tie’ against Gujarat

Share

Narendra Kandela

Narendra Kandela
Pro Kabaddi

தமிழ் தலைவாஸ் அணிக்காக முதல் ரெய்டுக்கு பவன்தான் சென்றிருந்தார். ஆனால், அவர் முதல் புள்ளியை எடுத்துக் கொடுக்கவில்லை. நரேந்திர கண்டேலாதான் ரெய்டு சென்று போனஸோடு சேர்த்து 2 புள்ளிகளை வென்று கொடுத்தார். தமிழ் தலைவாஸ் பவனிடமிருந்து எதிர்பார்த்தை இந்த போட்டியில் நரேந்திர கண்டேலா செய்து கொடுத்தார். இந்த போட்டியின் ராக் ஸ்டார் அவர்தான். பவனுக்கு பதில் வந்த ஹிமான்ஸூவும் அஜிங்கியாவும் நரேந்தருக்கு ஓரளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர்.

முதல் பாதி முடிவடைகயில் 16-18 என தமிழ் தலைவாஸ் கொஞ்சம் பின் தங்கியே இருந்தது. ஆனால், அடுத்த இரண்டாம் பாதி தொடக்கத்திலிருந்தே தமிழ் தலைவாஸ் மீண்டு வந்து ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. நரேந்தரின் தீவிரமான ரெய்டாலும் அபிஷேக்கின் வலுவான டேக்கிளும் குஜராத் அணி ஆல் அவுட் ஆனது. 21-18 என தமிழ் தலைவாஸ் அணி முன்னிலையை பெற்றது. இந்த முன்னிலை ஏறக்குறைய கடைசி நிமிடங்கள் வரை தமிழ் தலைவாஸ் வசமே இருந்தது. கடைசி ஒரு நான்கு நிமிடங்களில்தான் ஆட்டமே மாறியது.

Tamil Thalaivas

Tamil Thalaivas
Pro Kabaddi

போட்டி முழுவதும் ஒரு சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது தமிழ் தலைவாஸ் அணிக்கு பின்னடைவாக அமைந்தது. குறிப்பாக, அந்தக் கடைசி சில நிமிடங்களில் நல்ல முன்னிலையிலிருந்து கோட்டைவிட்டது ஏமாற்றமே. குஜராத்தின் Do or Die ரெய்டுகளின்போது வம்படியாக டேக்கிளுக்கு சென்று பெரும்பாலான சமயங்களில் சொதப்பியது. டிஃபன்ஸில் லெஃப்ட் கார்னரில் சாஹில் வலுவாக இருக்க, அதே அளவு திறனை ரைட் கார்னரில் நின்ற சாஹர் வெளிக்காட்டவில்லை. ரைட் கவரில் நின்ற அபிஷேக்கே சில அசகாய முயற்சிகளை செய்து புள்ளிகளை வென்று கொடுத்தார்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com