“அதிமுக நெருக்கடிக்கு யார் காரணம்? சதி வலை பின்னியது யார்?” – மதுரையில் ஓபிஎஸ் பேட்டி

Share

ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.கவில் உள்கட்சி பூசல் அதிகரித்துள்ள நிலையில், ‘ தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலை, யாரால் எப்படி ஏற்பட்டது, எவரால் இந்தச் சதி வலை பின்னப்பட்டது என்பதை உணர்ந்து மக்களே உரிய தீர்ப்பினை வழங்குவார்கள்’ என்கிறார், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.

சென்னை வானகரத்தில் நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில், 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் அறிவித்தனர்.

ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி பதவியேற்கும் வகையில் வரும் ஜூலை 11 ஆம் தேதி புதிய பொதுக்குழு நடைபெற உள்ளதாகவும் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, ஒற்றைத் தலைமையை நோக்கி முன்னேறிய அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களாகப் பார்க்கப்பட்ட மைத்ரேயன், மா.ஃபா.பாண்டியராஜன், வேளச்சேரி அசோக் உள்ளிட்டவர்களையும் தன்பக்கம் வர வைத்தார்.

மேலும், தென்மாவட்டங்களில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஆகியோரின் ஆதரவாளர்களையும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வளைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஓ.பி.எஸ், தனது ஆதரவாளரான பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ‘ அ.தி.மு.க பொதுக்குழுவை நடத்தத் தடையில்லை. அதேநேரம், தீர்மானம் தொடர்பாக உள்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது’ என்றார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com