அதிமுக ஏ, பி பிரிவை கலைத்து பாஜவுடன் இணைத்து விடலாம்: முத்தரசன் பேட்டி

Share

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டி: நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலை நாடு முழுவதும் ஒரே தடவையாக நடத்துவது என்பது ஒரு பொருத்தமற்ற செயல். இதை பாஜ, தனது எஜமானரான ஆர்.எஸ்.எஸ் கொள்கையின் அடிப்படையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சித்தாந்தத்தை கொண்டுவர நினைப்பது பொருத்தமற்றது. இதை இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற முடிவை ஜெயலலிதா இருக்கும் வரை எதிர்த்து வந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஆதரிக்கிறார்கள். என்ன காரணம் என தெரியவில்லை. சட்டப்பேரவையில் அண்ணாவின் பெயரை குறிப்பிட ஆளுநர் மறுக்கிறார். அதனையும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆட்சேபனை செய்யவில்லை. அதற்கான கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. அதற்கு பதிலாக அதிமுக ஏ பிரிவு, பி பிரிவு என்பதை கலைத்துவிட்டு பாஜவுடன் இணைத்து விடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com